×

10 மாதங்களுக்கு பிறகு 9, பிளஸ்1 மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு

தர்மபுரி, பிப்.9: தர்மபுரி மாவட்டத்தில் 10 மாதங்களுக்கு பிறகு 9, 11ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது. தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்த பின்னரே, மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள், தொற்று பரவல் குறைந்ததையடுத்து, மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் 10 மாதங்களுக்கு பிறகு, கடந்த 19ம் தேதி 10, 12ம் வகுப்புக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று 9, 11ம் வகுப்பு பள்ளிகள் திறக்கப்பட்டன.

மாவட்டத்தில் உள்ள 347 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல் வெப்ப நிலையை அறிய, தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்த பிறகே பள்ளிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் பெற்றோர்களின் அனுமதி கடிதத்துடன் பள்ளிக்கு வந்திருந்தனர்.பின்னர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வகுப்பறைக்கு சென்றனர். மாணவர்கள் கூட்டமாக செல்வதை தவிர்த்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மாவட்டத்தில் உள்ள 225 அரசு பள்ளிகள், 6 அரசு உதவிபெறும் பள்ளிகள், 6 சிபிஎஸ்இ பள்ளிகள், 104 மெட்ரிக் பள்ளிகள் திறக்கப்பட்டன,’ என்றனர்.

Tags : schools ,
× RELATED பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்...