மின் கம்பி உரசி டிராக்டரில் தீ

அரூர், பிப்.9: மொரப்பூர் அடுத்த சின்ன கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் விசித்திரா. இவர் வளர்த்து வரும் மாடுகளுக்கு, கல்லாவி அடுத்த கதிரம்பட்டியிலிருந்து, ஆசைத்தம்பி என்பவரது டிராக்டரில் ₹10ஆயிரத்திற்கு வைக்கோல் தீவனம் ஏற்றி வந்தார். வரும் வழியில் மொரப்பூர் அடுத்த சாமண்டள்ளி புதூர் பகுதியில், டிராக்டர் வந்த போது, மின்கம்பி உரசி டிராக்டரில் இருந்த வைக்கோலில் தீ பிடித்தது. தகவல் அறிந்த அரூர் தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர்.இதில், வைக்கோல் பாரத்தின் ஒரு பகுதி மட்டும் தீயில் சேதமடைந்தது.

Related Stories:

>