நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் செயின் பறித்த கும்பல்

தர்மபுரி, பிப்.9:தர்மபுரி பிஆர்.சுந்தரம்ஐயர் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். முன்னாள் அரசு வழக்கறிஞர். இவரது மனைவி மஞ்சுளா (44). இவர் நேற்று மாலை தர்மபுரி கடைவீதியில் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்கிக் கொண்டு நடந்து வந்தார். அப்போது அவர் பின்னால் பைக்கில் வந்த இருவாலிபர்கள், அவரது கழுத்தில் இருந்த 7பவுன் தங்க செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து மஞ்சுளா தர்மபுரி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories:

>