கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

தர்மபுரி, பிப்.9: தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், நாளை (10ம் தேதி) காலை 10மணிக்கு, மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடக்கிறது. அது சமயம் இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், பொறுப்புக்குழு உறுப்பினர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். கூட்டத்தில் கவிஞர் கனிமொழி எம்பி வருகை குறித்தும், கட்சி ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>