சசிகலா வருகையால் காரிமங்கலம் வழியாக போக்குவரத்து மாற்றம்

காரிமங்கலம், பிப்.9: சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து, பெங்களூருவில் இருந்து சசிகலா நேற்று கார் மூலம் சென்னை திரும்பினார். அவருக்கு ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு இடங்களில், அமமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்காக ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் கிருஷ்ணகிரிக்கு சென்றதால், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதனால், கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு நோக்கி சென்ற அனைத்து வாகனங்களையும், காரிமங்கலம் அடுத்த அகரம் பிரிவு ரோட்டில், போலீசார் தடுத்து நிறுத்தி, பாலக்கோடு சாலை மற்றும் அகரம் சாலையில் திருப்பி விட்டனர். இதனால், காரிமங்கலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த கனரக வாகனங்கள், லாரி டிரைவர்கள் வழி தெரியாமலும், மொழி தெரியாமலும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>