×

மோடி இங்க கால ஊனி தான் பாக்குறாரு… நம்மாளுங்க குப்புற கவிழ்த்து போட்டுறாங்க… தமிழ்நாட்டில் தாமரை மல்லாக்க தான் விழும் மலரவே மலராது… நடிகர் இமான் அண்ணாச்சி சுளீர்

1. பெண்கள் பாதுகாப்பை பற்றி பொது வெளியில் உணர்ச்சிகரமாக பேசுகிறார் விஜய், ஆனால் அவரது மனைவியே விஜய் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும் குற்றம்சாட்டியிருக்கிறாரே?
அது கொஞ்சம் லேட்டா தெரியணும்னு நாங்க நினைச்சோம். ஆனா அது இவ்வளவு குயிக்கா தெரியுங்கறது இப்பதான் எங்களுக்கே தெரியுது. இப்போ மக்கள் எல்லாருக்குமே ஓரளவுக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். அதனுடைய பாதிப்பு என் கண்ணுக்கு தெரியுது. அது விஜய் கண்ணுக்கு தெரியுதான்னு எனக்கு தெரியல. நான் இப்போது வேலூரில் படப்பிடிப்பில் இருக்கேன். அந்த தளத்துல பேசிக்கிட்டாங்க, நான் இந்த வாட்டி விஜய்க்கு தான் ஓட்டு போடலாம்னு இருந்தேன், ஆனா இப்படி பண்ணதுனால இந்த வாட்டி விஜய்க்கு நான் ஓட்டு போடல, அப்படிங்கற மாதிரி சொன்னாங்க. அதுல இருந்தே நான் தெரிஞ்சுக்கிட்டேன், இப்ப ரைட் ஓகே நான் தெரிஞ்சுகிட்டேன், பாதிப்புகள் கொஞ்சம் பெரிய அளவுல தான் இருக்கும் போல. முதல்வருக்கும், எனக்கும் தான் போட்டினு விஜய் சொன்னார்ல… இப்போ அவர் போட்டி, தலைக்கறிக்கு தான் போகணும்.

2. வேண்டாம் என்று அதிமுக ஒதுக்கிய நிலையில், ஓபிஎஸ் திமுகவில் இணைந்த உடன் அதிமுக தலைவர்கள் பதறுவது பற்றி?
ஓபிஎஸ்சும் எந்த நிபந்தனையும் இல்லாமல் தன்னை அதிமுகவில் இணைக்க கேட்டார். அதையும் எடப்பாடி பழனிசாமி ஒரு பொருட்டாக கூட எடுத்து கொள்ளவில்லை. சேர்க்க முடியாது என்று அவரை அவமானப்படுத்தினார்கள். அவர் திமுகவில் இணைந்தது சரியான முடிவு தான். ஒவ்வொருத்தருடைய மனநிலை ஒரு மாதிரி இருக்கும். அதுல ஓபிஎஸ் அண்ணன் இப்போது சரியான இடத்துக்கு தான் வந்திருக்காரு. தாய் கழகத்தில் இணைந்தது ஒன்னும் தப்பு கிடையாது. கண்டிப்பா அவருக்கு இது ஒரு பெரிய பலமாகத் தான் இருக்கும். அரசியல்ல நிரந்தர எதிரியும் கிடையாது, நிரந்தர நண்பனும் கிடையாதுன்னு சொல்லுவாங்கல. ஆனா நான் எந்த இடத்துக்கு போய் பேசப்போனாலுமே யாரையும் அவதூறா பேசவே மாட்டேன். ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி.

3. எப்பவும் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யக்கூடிய பிரதமர் மோடி, இப்போது அடிக்கடி தமிழகம் வருவது பற்றி?
​ எப்படியாவது தமிழ்நாட்டுல கால் ஊனிறலாம்னு தான் பார்க்கிறாரு. பாவம் அவர்களால் கால் ஊன முடியல. அவரு ஊனி ஊனி தான் பார்க்கிறாரு, நம்ம ஆளுங்க குப்புற கவுத்து போட்டுகிட்டே இருக்காங்க. தமிழ்நாட்டுல அவரால கால் ஊனவே முடியாது. தாமரை மலர்ந்தே தீரும்னு சொல்லிட்டிருக்காங்க. ஆனா அது மல்லாக்க அடிச்சு தான் விழுந்து தீருமே தவிர மலராது.

4. முக்கிய கட்சிகள் எல்லாம் திமுக கூட்டணியில் இணைவதை எப்படி பார்க்கிறீர்கள்?
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அப்படி இருக்கிறது. வெற்றி கூட்டணி என்பதால் பலர் இணைகிறார்கள். இந்த தேர்தலில், 234 தொகுதியிலுமே திமுக தான் ஜெயிக்கும். 234 லட்சியம், 200 நிச்சயம் அப்படின்னு தலைவர் சொன்னதை தான் நானும் சொல்வேன். முதல்வரின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் நல்லா ரீச் ஆகியிருக்கிறது. மகளிர் உரிமை தொகை ரூ.5000 போட்ட அணுகுண்டெல்லாம் இப்ப பயங்கரமா ஒர்க் அவுட் ஆகிட்டு இருக்கு. அதனால தேர்தல்ல அது மிகவும் சாதகமான ஒரு சூழ்நிலை தான் உருவாக்கி இருகிறது. ரெண்டாவது இப்ப கூட்டணியும் வலுவடைஞ்சுட்டே இருக்குல்ல, அதனால எதிரிகளை பத்தி நம்ம யோசிக்க வேண்டிய அவசியமே இல்ல, வெற்றி நிச்சயம். நானும் இந்த வாட்டி சீட் கேட்கலாம்னு பார்த்தேன். விருகம்பாக்கத்தில் விஜய் நிற்பதாக பேசிகிட்டாங்க, அவரு எங்க நிக்கிறாரோ அவரை எதிர்த்து நிக்கணும்னு யோசிச்சு கிட்டே இருந்தேன். இப்போ சூட்டிங் போயிட்டு இருக்கறதுனால அடுத்த வாட்டி சீட் கேட்கலாம் என முடிவு செய்திருக்கிறேன்.

Tags : Modi ,Tamil Nadu ,Iman Annachi Sulir ,Vijay ,
× RELATED சென்னை அண்ணா அறிவாலயத்தில் உதயநிதியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேர்காணல்