ரயில்வே ஊழியர், டிரைவர் இளம்பெண் தற்கொலை சிறப்பு அலங்காரத்தில் நாச்சியார் 7 வது நாளாக தொடர் மறியல்

திருச்சி, பிப். 9: புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் கடந்த 2ம் தேதி முதல் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் நேற்று மாவட்ட தலைவர் விவேகானந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். முன்னதாக சாலைமறியல் போராட்டத்தின் போது அரசு ஊழியர் ஒருவரை பிணம் போல் படுக்க வைத்து துணியால் போர்த்தி மாலை அணிவித்திருந்தனர். தொடர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 35 பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்து அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். தொடர்ந்து மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories:

>