×

மணப்பாறை பேருந்து நிலையத்தில் முறையாக இயக்கப்படாத அரசு பேருந்தை சிறைபிடித்து தர்ணா


மணப்பாறை, பிப்.9: முறையாக இயக்காத அரசு பேருந்தை நிலையத்தில் சிறைபிடித்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மணப்பாறை அடுத்த கண்ணுடையான்பட்டியில் இருந்து நகர் பகுதிக்கு இயக்கப்பட்டு வரும் அரசு நகர பேருந்து காலையில் வருவதுபோல் மாலையில் வருவதில்லை என்றும், முறையாக கால அட்டவணையில் பேருந்துகள் வருவதில்லை என்றும், பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களின் விருப்பப்படியே பேருந்துகள் கிராமத்திற்கு வந்து செல்வதாகவும் கூறி கடந்த ஜனவரி 1ம் தேதி கண்ணுடையான்பட்டிக்கு வந்த நகர பேருந்தினை சிறைபிடித்து பொதுமக்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சமரச பேச்சுவார்த்தைக்கு பின் நகர பேருந்து முறையாக இயங்கியது.

இந்நிலையில் கடந்த 10 தினங்களாக பேருந்து கிராமத்திற்கு வரவில்லை என கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து திங்கட்கிழமை மாலை கால அட்டவணை நேரத்தில் மணப்பாறை பேருந்து நிலையத்திற்கு கிராம மக்கள் வந்துள்ளனர். அப்போது அந்த பேருந்து மாற்று வழித்தடத்தில் இயங்குவதை கண்ட கிராம மக்கள் பேருந்து நிலையத்திலே அந்த நகர பேருந்தை சிறைபிடித்து தர்ணாவில் ஈடுபட்டனர். பேருந்து பணிமனை அதிகாரி மற்றும் காவல்துறையினர் சமரசம் செய்து முறையாக வழித்தடத்தில் பேருந்து செல்லும் என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Tags : Darna ,bus stand ,Manapparai ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை