குடும்பத் தகராறில் இளம்பெண் தீக்குளிப்பு

துறையூர், பிப்.9: துறையூர் அருகே பசலிக் கோம்பையை சேர்ந்தவர் அருணாசலம்(32). வங்கி நகை மதிப்பீட்டாளர். இவரது மனைவி அம்பிகா(26). திருமணமாகி 8 வருடம் ஆகிறது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள். இந்நிலையில் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். நேற்று காலை நடந்த சண்டையில் மனமுடைந்த அம்பிகா வீட்டில் யாரும் இல்லாதபோது தீக்குளித்தார். அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி துறையூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சிக்கு அனுப்பப்பட்டார். இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories:

>