கொருக்கை அரசு கால்நடை பண்ணையில் 18ம் தேதி உம்பளாச்சேரி இன கால்நடைகள் பொது ஏலம்

திருத்துறைப்பூண்டி, பிப்.9: திருத்துறைப்பூண்டி அருகே கொருக்கை அரசு கால்நடை பண்ணையில் பாரம்பரிய உம்பளாச்சேரி இன கால்நடைகள் வரும் 18ம்தேதி பொது ஏலம் விடப்பட உள்ளது. இதுகுறித்து கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் தனபால் கூறியது: கொருக்கை அரசு கால்நடை பண்ணையில் கீழத்திடல் கால்நடை பிரிவில் வரும் 18ம் தேதி காலை 11 மணி முதல் பாரம்பரிய உம்பளச்சேரி இன கால்நடைகள் வற்றிய பசுக்கள் 06 கிடேரி-12 இளம் காளைகள் 12, காளை கன்றுகள் 08 உள்ளிட்ட மொத்தம் 51 கால்நடைகள் பொது ஏலம் நடைபெறும். ஏலம் எடுக்க விரும்புவோர் ரூ.10,000 டேவணித் தொகையை துணை இயக்குனர் கால்நடை பராமரிப்பு துறை, கொருக்கை என்ற பெயருக்கு டிமாண்ட் டிராப்ட் எடுத்து வரும் 18ம் தேதி காலை 10 மணிக்குள் துணை இயக்குனர் அலுவலகத்தில் செலுத்தி பொது ஏலத்தில் கலந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>