தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

தஞ்சை, பிப்.9: தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கோவிந்தராவ் தலைமையில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 264 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர். இம்மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரங்களை உடனே மனுதாரருக்கு தெரிவிக்க அலுவலர்களை அறிவுறுத்தினார். மேலும் சவுதி அரேபியா நாட்டில் பணியில் இருந்தபோது இறந்த கும்பகோணம் தேனாம்படுகை கிராமம் மேலப்பழையார் குடியானத்தெருவைச் சேர்ந்த நாராயணசாமி மகன் கணேசன் என்பவருக்கு ரூ.1.69 லட்சத்திற்கான காசோலையை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார்.

பட்டுக்கோட்டை வட்டம் திருச்சிற்றம்பலம் மேற்கு கிராமம் பொன்க்கான்விடுதி வடக்கு என்ற முகவரியை சேர்ந்த ராமநாதன் முருகன் என்பவருக்கு சேர ண்டிய சட்டப்படியான நிலுவைத் தொகை ரூ.1.38 லட்சத்திற்கான காசோலையை அவரது மனைவி நாகலட்சுமி என்பவரிடம் வழங்கினார். பூதலூர் பகுதியில் வருவாய்த்துறை மூலம் மழை பாதிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணிகள் தனியார் கணினி கடையில் பதிவேற்றம் செய்த பூதலூர் நடுத்தெருவைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் விக்னேஸ்வரன் என்பவருக்கு உடலில் தோல் முழுவதும் பாதிக்கப்பட்டிருப்பதை கண்ட கலெக்டர் கோவிந்தராவ் அவரது கோரிக்கையை ஏற்று மருத்துவ சிகிச்சைக்காக தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார். மேலும் கருணை அடிப்படையில் பூதலூர் வட்டம் கீழதிருவிழாப்பட்டி மந்தைவெளியை சேர்ந்த ராமமூர்த்தி மகள் சங்கீதா என்பவருக்கு புதுக்குடி, ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் சத்துணவு மைய அமைப்பாளர் பணிக்கான ஆணையை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் வழங்கினார். டி.ஆர்.ஓ.அரவிந்தன், தனித்துணை ஆட்சியர் சாலைதவவளவன் (சமூக பாதுகாப்பு திட்டம்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More