×

264 மனுக்கள் குவிந்தன மன்னார்சமுத்திரம் ஊராட்சியில

தஞ்சை, பிப்.9: மன்னார்சமுத்திரம் ஊராட்சியில் விலையில்லா வெள்ளாடு வழங்கும் திட்டத்தில் தகுதியுடைய நபர்கள் யாரும் பயன்பெறாததால் கலெக்டர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர். தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தலைமை வகித்தார். அப்போது, திருவையாறு தாலுகா மன்னார்சமுத்திரத்தை சேர்ந்த சிலம்புசெல்வன், காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ரவிச்சந்தர் மற்றும் ஏராளமான கிராம பொதுமக்கள் அளித்த மனுவில், மன்னார்சமுத்திரம் ஊராட்சியில் 256 பேருக்கு விலையில்லா வெள்ளாடு வழங்கப்பட்டது. இதற்கு நிலம் இருக்ககூடாது, மாடுகள், ஆடுகள், கனரக வாகனங்கள் எதுவும் இருக்க கூடாது என்பது தான் விதிமுறை. ஆனால் இந்த ஊராட்சியில் 256 பேரில் 170 பேர் நிலம், ஆடு, மாடுகள், கனரக வாகனங்களுடன் வசதியுடன் வாழ்ந்து வருபவர்கள். வறுமைக்கோட்டிற்குகீழ் உள்ள அடித்தட்டு மக்கள், மாற்றுத்திறனாளிகள், விதவை என தகுதி இருந்தும் யாரும் பயன்பெறவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் இதை ஆய்வு செய்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு பயனாளிகளை தேர்வு செய்து அரசின் நலத்திட்டம் சென்றடைய மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : petitions ,Mannarsamudram ,
× RELATED 5 ராஜ்குமார், 3 ராமச்சந்திரன் கோவையில் போட்டி