×

தேர்தல் முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் அனைத்து கட்சியினர் பங்கேற்பு

தஞ்சை,பிப்.9:  தமிழகத்தில் 2021ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு, தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தலைமை வகித்தார். 1000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்கு சாவடிகளிலிருந்து துணை வாக்குச்சாவடிகள் பிரிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் பகுஜான் சமாஜ் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், பேசிய மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ், தஞ்சை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில், 2291 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. இதில் 727 வாக்குச் சாவடிகளில் 1000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் 1000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளில் துணை வாக்குச்சாவடிகள் அமைக்க இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 727 வாக்குச்சாவடிகளில் துணை வாக்குச்சாவடிகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. துணை வாக்குச்சாவடிகள் அமையும் தேர்வில், தஞ்சை மாவட்டத்தில் மொத்த வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 3018ஆக உயரும்  என்று தெரிவித்தார்.

Tags : meeting ,parties ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...