ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல் குறித்து விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா

பொன்னமராவதி, பிப். 9: ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல் குறித்து பொன்னமராவதி வட்டார விவசாயிகள் கண்டுணர்வு பயணம் மேற்கொண்டனர். பொன்னமராவதி வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் என்ற தலைப்பில் விராலிமலை வட்டாரம் சிவராம் ஒருங்கிணைந்த பண்ணைக்கு கண்டுணர்வு பயணமாக 50 விவசாயிகள் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு ஒருங்கிணைந்த முறையில் லாபகரமான கறவை மாடு வளர்ப்பு, கன்றுகளின் பராமரிப்பு, இனப்பெருக்க முறை மற்றும் ஆடு, கோழி, தேனீ வளர்ப்பு குறித்து பண்ணை உரிமையாளர் எடுத்து கூறினார். இதைதொடர்ந்து ரசாயன உரமின்றி இயற்கை முறையில் வளர்க்கப்படும் தென்னை, சோளம், மஞ்சள் மற்றும் மா, கொய்யா, சப்போட்டா போன்ற பழ மரக்கன்றுகள் , அசோலா தீவன பயிர் உற்பத்தி குறித்து விவசாயிகள் பார்வையிட்டனர். ஏற்பாடுகளை பொன்னமராவதி வட்டார வேளாண் உதவி இயக்குநர் சிவராணி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜீவ், உதவி தொழில்நுட்ப மேலாளர் சுப்பிரமணியன் செய்திருந்தனர்.

Related Stories:

>