பெரம்பலூர் ஆயுதப்படை வளாகத்தில் போலீசாருக்கு கூட்டு கவாத்து பயிற்சி

பெரம்பலூர், பிப்.9: பெரம்பலூர் ஆயுதப்படை வளாகத்தில் போலீசாருக்கு கூட்டு கவாத்து பயிற்சி மற்றும் நினைவூட்டல் பயிற்சி நேற்று தொடங்கியது. பெரம்பலூர் அருகே திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர்பந்தல் அருகே உள்ள ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதப்படை காவலர்கள் கூட்டு கவாத்து பயிற்சி மற்றும் நினைவூட்டல் பயிற்சி நேற்று தொடங்கியது. பெரம்பலூர் மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் அறிவுறுத்தலின் பேரில் 15 நாட்கள் நடத்தப்படும் இந்த பயிற்சியினை மாவட்ட ஏடிஎஸ்பி கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். ஆயுதப்படை டிஎஸ்பி சுப்பராமன் முன்னிலை வகித்தார்.இன்ஸ்பெக்டர் சுப்பையன் வரவேற்றார். இதில் ஆயுதப்படை போலீசாருக்கு உடற்பயிற்சி மற்றும் கவாத்து பயிற்சி அளிக்கப்பட்டது. குறிப்பாக போலீசாருக்கு நடைப்பயிற்சி, ஓட்டப் பயிற்சி, தத்தித்தாண்டுதல் ஆகிய உடல்திறனை மேம் படுத்தத் தேவையான பயிற்சிகளும், ஆயுதங்களை கையாள்வது, பராமரிப்பது பாதுகாப்பது குறித்த செயல்முறை விளக்க பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. பயிற்சியில் ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கலந்துகொண்டு காலை, மாலை தொடர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.

Related Stories:

>