×

பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லூரிகளில் முதல், இரண்டாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்கம்

பெரம்பலூர், பிப்.9: பெரம்பலூர் மாவட்டத்தில் 2020-21 கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு, 2ம்ஆண்டு கல்லூரி வகுப்புகள் 8 மாதங்களுக்குப் பிறகு 7 கலை அறிவியல் கல்லூரிகளில் நேற்று தொடங்கியது. மாஸ்க் அணிந்து, சமூகஇடை வெளியுடன் முறைப்படி அமர வைக்கப்பட்டனர். கடந்த 2020ம் ஆண்டு உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக மார்ச் மாதம் 25ம் தேதி முதல் மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்தத் தடை உத்தரவு காரணமாக பள் ளி, கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டன. செமஸ்டர் தேர்வைக் கருத்தில் கொண்டு கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்களுக்காக சமீபத்தில் 3ம்ஆண்டு வகுப்புகள் மட்டும் தொடங்கி நடைபெற்று வந்தன.

இந்நிலையில் கல்லூரி முதலாமாண்டு இரண்டாமாண்டு வகுப்புகள் தொடங்க அரசு அனுமதி அளித்ததன்பேரில், நேற்று முதல் அரசு, தனியார் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம்ஆண்டு பட்ட வகுப்புகள் தொடங்கின.
இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டையிலுள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி, குரும்பலூர் அரசுக்கலை அறிவியல் கல்லூரி, வேப்பூர் அரசு மகளிர் கலைஅறிவியல் கல்லூரி மற்றும் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, சீனிவாசன் இருபாலர் கலைஅறிவியல் கல்லூரி, சாரதா மகளிர் கலைஅறிவியல் கல்லூரி ஆகிய 7 கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு 2ம்ஆண்டு வகுப்புகள் தொடங்கி நடைபெற்றன. தமிழகஅரசு மற்றும் பாரதிதாசன் பல்க லைக்கழக நெறிகாட்டுதல் வழிமுறைகளின்படி கல்லூ ரிக்கு வருகைதரும் மாண வ, மாணவியர் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். வகுப்புகளில் சமூக இடை வெளியுடன் அமரவைக்கப்பட வேண்டும். கல்லூரிக்கு உள்ளே வரும்போது சானிடைசர்மூலம் கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் போன்ற விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வகுப்புகள் நடைபெற்றன.

Tags : district ,Perambalur ,colleges ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...