புதுவேட்டக்குடி கிராமமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு 9, 11ம் வகுப்புகளும் துவங்கியது

இதேபோல் எட்டு மாதங்களுக்கு பிறகு நேற்று (8ம்தேதி) முதல் ஒன்பதாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்காக வகுப்புகள் தொடங்கி உள்ளன. இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள், அரசு நிதிஉதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகள் என 149 பள்ளிகளைச் சேர்ந்த 4,393 மா ணவர்கள், 3,863 மாணவிகள் எனமொத்தம் 8,256 மாணவ, மாணவியர் பயிலும் 9ம்வகுப்பும், 3,237 மாணவர் கள், 3,871 மாணவிகள் என மொத்தம் 7,108 மாணவ, மாணவியர் பயிலும் 11ம் வகுப்பும் திறக்கப்பட்டன.

மாணவ, மாணவியர் வருகைக்காக பள்ளிக்கல்வித் துறை சார்பாக முகக் கவசம் அணிதல், சானிடைசர் கொண்டு கைகளைக் கழுவுதல், தெர்மல் ஸ்கேனர் கொண்டு வெப்பப் பரிசோ தனை மேற்கொள்ளுதல், வகுப்புகளில் பொதுதேர்வு முறைப்படி சமூக இடைவெ ளிவிட்டு அமர வைத்தல் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இதனை பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதிவாணன், மாவட்ட கல்வி அலுவலர்கள் பெரம்பலூர் மாரிமீனாள், வேப்பூர் குழந்தை ராஜன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

Related Stories:

>