கடையில் பதுக்கி விற்பனை செய்த புகையிலை பொருட்கள் பறிமுதல்

சீர்காழி, பிப். 9: சீர்காழி பகுதியில் தமிழக அரசால் தடை செய் யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மயிலாடுதுறை எஸ்பி  நாதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து எஸ்பி உத்தரவின்பேரில் சீர்காழி ஈசானிய தெரு பகுதிகளில் உள்ள கடைகளில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். அதில் பெருமாள் என்பவரது கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ததுடன் கார்த்திக் (32) என்பவரை கைது செய்து சீர்காழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சீர்காழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>