×

தரகம்பட்டி, காணியாளம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்

கடவூர், பிப்.9: கடவூர் ஒன்றியம் தரகம்பட்டி, காணியாளம்பட்டி ஆகிய ஊர்களில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார். திமுக தெற்கு ஒன்றியம் கடவூர் சுதாகர், வடக்கு ஒன்றியம் ராமலிங்கம் ஆகியோர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாலை அணிவித்து வரவேற்றனர். பிரசார கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் துரைராஜ், ஊராட்சி தலைவர்கள் ஊராட்சி தலைவர்கள் முருகேசன்(வெள்ளப்பட்டி), கீதா செந்தில்மோகன்(மாவத்தூர்), பழனியம்மாள் வரதராஜன்(தென்னிலை), தெற்கு ஒன்றிய துணை செயலாளர் தமிழ்பொண்ணுச்சாமி, இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, விவசாய அணி, வழக்கறிஞர் அணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். மணமக்களை வாழ்த்திய உதயநிதி:  தரகம்பட்டி பிரசாரத்தை முடித்துவிட்டு காணியாளம்பட்டி செல்லும் வழியில் குளக்காரம்பட்டியை சேர்ந்த சென்டரிங் அண்ணாதுரை மகன் திருமணத்தில் மணமக்கள் அன்பழகன்-துர்காதேவி ஆகியோரை உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தினார். இதில் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Stalin ,Udayanithi ,election campaign ,Kaniyalampatti ,
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 5-வது கட்ட...