×

9, 11ம் வகுப்புக்கான பள்ளி கல்லூரிகள் திறப்பு

திருப்பூர், பிப். 9: கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. இதையடுத்து 2020-21-ம் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்-லைன் வழியாகவும், கல்வி தொலைக்காட்சி மற்றும் யூ-டியூப் மூலமாகவும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் தமிழகத்தில் 10 மாத காலத்துக்கு பிறகு 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் வகுப்புகள் செயல்பட துவங்கின.
இந்த நிலையில், தற்போது கொரோனாவில் தாக்கம் வெகுவாக குறைந்து வரும் நிலையில், அரசின் உத்தரவுப்படி 11 மாதத்திற்கு பிறகு நேற்று முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. திருப்பூரில் 50 சதவீத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு ஆர்வமுடன் வந்தனர். மாணவ-மாணவிகளை பள்ளி நுழைவு வாயிலில் பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றனர். திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி நுழைவு வாயிலில் மாணவிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. கைகளை சுத்தப்படுத்த கிருமிநாசினி வழங்கப்பட்டது. கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின் மாணவிகள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தோழிகள், ஆசிரியர்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி என்று மாணவிகள் தெரிவித்தனர். இதேபோல், கல்லூரிகளில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவ- மாணவிகளுக்கும் நேற்று முதல் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.

Tags : Opening ,school colleges ,class ,
× RELATED அரியலூரில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா