×

மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து 18 கிராமங்களில் 2500 வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது

குன்னூர்,பிப்.9: கோத்தகிரி ஹெத்தையம்மன் கோவில் பூசாரிகளை மாற்றுவது மற்றும் கோயில் திருவிழா பிரச்னை தொடர்பாக நீலகிரி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து  2500 வீடுகளில் நேற்று பொது மக்கள் கருப்புகொடி ஏற்றினர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பெத்தளாவில் உள்ள கைகாரு சீமை 18  கிராமங்களுக்கு சொந்தமான இடத்தில் பிரசித்தி பெற்ற ஹெத்தை அம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக கைகாரு சீமை மக்களுக்கும்  கோவில் பூசாரிகளுக்குமிடையே பிரச்னை நிலவியது. கொரோனா தொற்று பரவல் காரணமாக குன்னூர் சப்.கலெக்டர் ரஞ்ஜித் சிங் உள்ளூர் பூசாரிகள் இருவரை தவிர வெளியூர் பூசாரிகள் உள்ளூர் மற்றும் வெளியூர் பொதுமக்களும் இந்த கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை என ஆணை பிறப்பித்தார். இந்நிலையில் கடந்த மாதம் கைகாரி சீமை மக்களை கலந்து ஆலோசிக்காமல் பூசாரி தரப்பினர் சார்பில்  திருவிழா நடத்த கடைசி நிமிடத்தில் புதிய ஆணை பிறப்பித்தார்.  
இதனை எதிர்த்து கைகாரு சீமை தலைவர் நஞ்சா கவுடர்  சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றமானது சப்.கலெக்டர் பிறப்பித்த ஆணைகளை உறுதி செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் செயல்படுத்திடும்மாறு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் கோயில் திருவிழாவை கொண்டாட, பூசாரிகள் தரப்பினருக்கு ஆதரவாக நடந்து கொண்ட மாவட்ட நிர்வாகத்தை கண்டிப்பதோடு, கைகர் சீமை பஞ்சாயத்து தீர்மானத்திற்கு எதிராக செயல்பட்ட பூசாரிகள் பிரபு,போஜன் மற்றும் ரேனேஷ்  ஆகியோரை நீக்கி புதிய பூசாரிகள் தேர்ந்தெடுக்க கிராம மக்கள் முடிவு செய்தனர். மாவட்ட நிர்வாகத்திற்கு தங்களது கண்டணத்தை தெரிவிக்கும் வகையில், கைகாரு உட்பட 18 கிராமங்களில் உள்ள 2,500 வீடுகளில் நேற்று கிராம மக்கள் கருப்பு கொடி ஏற்றினர். மேலும் அனைத்து வீடுகளிலும் குடும்ப அட்டைகளை அரசிடம் ஒப்படைத்து வருகின்ற  சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கவும் கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

Tags : houses ,villages ,district administration ,
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...