கோவையில் போலீஸ் தடையை மீறி தி.மு.க. ஆர்ப்பாட்டம்

கோவை, பிப். 9: கோவையில் போலீஸ் தடையை மீறி தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடந்தது. கார்த்திக் எம்.எல்.ஏ. உள்பட 268 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், பெரியகடை வீதி பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தராத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, கோவை டவுன்ஹாலில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பெரியகடை வீதி பகுதி பொறுப்பாளர் பத்ருதீன், வார்டு பொறுப்பாளர்கள் யூசுப், அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இப்போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும், தடையை மீறி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், பங்கேற்ற தி.மு.க. தொண்டர்கள், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர். இத்திடீர் போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, கார்த்திக் எம்.எல்.ஏ. உள்பட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 69 பெண்கள் உள்பட 268  பேரை போலீசார் கைது செய்தனர். மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் பி.நாச்சிமுத்து, மெட்டல் மணி, வக்கீல்கள் பி.ஆர்.அருள்மொழி, கணேஷ்குமார், ஜி.டி.ராஜேந்திரன், ரவிச்சந்திரன், விஜயராகவன், முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், வெ.நா.உதயகுமார், திராவிடமணி, மு.மா.ச.முருகன்,  மு.இரா.செல்வராஜ், கோட்டை அப்பாஸ், உமாமகேஸ்வரி, செல்வராஜ், கண்ணன், மாரிச்செல்வன், டவுன் ஆனந்தன், சிங்கை பிரபாகரன், ராஜா, கமல் மனோகர், ரமேஷ், தேவசீலன், ஆர்.ஆர்.மோகன்குமார், கல்பனா செந்தில், சித்ரகலா, ராஜராஜேஸ்வரி, மீனாஜெயகுமார், எஸ்.எம்.சாமி, மார்க்கெட் மனோகரன், பசுபதி, சிங்கை சிவா, சேதுராமன், பாலசுப்பிரமணியம், நாகராஜ், ஈஸ்வரி ராதாகிருஷ்ணன், முருகவேல், தளபதி இளங்கோ, அக்ரி பாலு, ஷாஜகான், கோகுல், சுந்தரலிங்கம், கணபதி சம்பத்குமார், ராதாகிருஷ்ணன், கணபதி தினேஷ், கணபதி முருகேஷ், புவனேஷ், மேரி ராணி, அன்னம்மாள் உள்பட பலரும் கைது செய்யப்பட்டனர். இதுபற்றி கார்த்திக் எம்எல்ஏ கூறுகையில், ‘‘சுகாதார  சீர்கேட்டின் இருப்பிடமாக கோவை மாநகராட்சி திகழ்கிறது. சாலைகள் அனைத்தும்  குண்டும், குழியுமாக காட்சி தருகிறது. குடிநீர் விநியோகம் முறையாக  நடக்கவில்லை. நகரில் எவ்வித அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தி தர  வில்லை. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் முறைகேடு நடக்கிறது. மக்களின் அடிப்படை  தேவைகளை செய்து கொடுக்காவிட்டால் போராட்டம் இன்னும் தீவிரம் அடையும்’’ என்றார்.

Related Stories:

>