×

வனஅலுவலர்கள் சங்க தேர்தல்

கோவை, பிப். 9: தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட கிளை சங்கத்தில் வன காப்பாளர், வனவர், வனச்சரகர் என 164 உறுப்பினர்கள் உள்ளனர். சங்கத்தின் தேர்தல் தமிழ்நாடு வனக்கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. தேர்தல் அலுவலர்களாக ஈரோடு மாவட்ட வனச்சரகர் சிவக்குமார், பொள்ளாச்சி வனவர் மாரிமுத்து ஆகியோர் இருந்தனர். இதில், மாவட்ட தலைவர், துணை தலைவர், செயலாளர், துணை செயலாளர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, மாவட்ட தலைவராக சிவபிரகாசம், செயலாளர் மூர்த்தி, துணைத்தலைவர் சுரேஷ், பொருளாளர் கார்த்திகேயன், இணைச்செயலாளர் கருப்புசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு உறுப்பினர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். வரும் 13-ம் தேதி தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கத்தின் மாநில அளவிலான தேர்தல் நடத்தப்படவுள்ளது.

Tags : Forest Officers Association Election ,
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை