வெளிமாநில மது விற்றவர் உட்பட 2 பேர் கைது

ஈரோடு, பிப். 9: ஈரோடு தாளவாடி பகுதியில் கர்நாடகா மாநில மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து தாளவாடி போலீசார் நேற்று முன்தினம் தாளவாடி சிக்கள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு வெளிமாநில மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த  நெய்தாளபுரத்தை சேர்ந்த நாகேஸ் (35) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 12 கர்நாடகா மாநில மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். சித்தோடு ராயர்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்றதாக ஈரோடு அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த முனுசாமி (53) என்பவரை சித்தோடு போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், பொது இடத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மது அருந்திய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>