சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்

ஈரோடு,பிப்.9: அருந்ததியர் இளைஞர் பேரவை சார்பில் கொடியேற்று விழா மற்றும் சுதந்திர போராட்ட வீரர் பொல்லான்.பெயர் பலகை திறப்பு விழா கொடுமுடி அருகே உள்ள வாழ நாயக்கன் பாளையத்தில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் சண்முகம் தலைமை தாங்கி தாங்கினார் . சிறப்பு அழைப்பாளராக அதன் தலைவர் வடிவேல் ராமன் கலந்துகொண்டு பெயர் பலகை மற்றும் கொடி ஏற்றி வைத்து பேசினார். ஜெகஜீவன்ராம் ஜனநாயக மக்கள் இயக்க பொதுச்செயலாளர் ஆறுமுகம், மாவட்ட தலைவர் சதீஷ் பாபு , நிர்வாகிகள் மாணிக்கம்  வீர வளவன், கண்ணையன், அழகர்சாமி கிளை தலைவர் முத்துசாமி செயலாளர் மாரிமுத்து மற்றும் சோழவன், மோகன் மகளிரணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரன் பொல்லானுக்கு அரச்சலூர் அருகே உள்ள நல்ல மங்காபாளையத்தில்  மணிமண்டபம் அமைக்க வேண்டும்.கொடுமுடி வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் கொடுமுடியில் நின்று செல்ல வேண்டும். கொடுமுடி வாழ நாயக்கன் பாளையத்தில் சுகாதார வளாகம், கழிப்பிட வசதி ஆகியவற்றை செய்து தரவேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories:

More