×

ஆற்றுக்கால்வாய் தூர்வாராததால் அவலம் புயல் தாக்கி 2 மாதங்களாகியும் விவசாய நிலங்களில் வடியாத வெள்ளநீர் பொன்னை அருகே விவசாயிகள் கண்ணீர்

பொன்னை, பிப்.9: பொன்னை அடுத்த மேல்பாடியில் ஆற்றுக்கால்வாய் தூர்வாராததால், நிவர் மற்றும் புரெவி புயல்கள் தாக்குதலால் விவசாய நிலங்களில் புகுந்த தண்ணீர் வடியாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மேல்பாடியில் 100 ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். கடந்தாண்டு நவம்பர் மாதம் நிவர், புரெவி புயல்களால் பெய்த பலத்த மழையால் பொன்னை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது.

இதில், மேல்பாடி ஆற்றுக்கால்வாய் தூர்வாராததால் இப்பகுதி விவசாய நிலங்களில் வெள்ள நீர் புகுந்து பயிர்கள் நாசமாயின. மேலும் 2 மாதங்களை கடந்தும் வெள்ளநீர் வடியாமல் உள்ளது. இதனால், விவசாயம் செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆற்றுக்கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ஆற்றுக்கால்வாய் தூர்வாராததால், விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்து பயிர்கள் சேதமானது. மேலும் 2 மாதங்களை கடந்தும் வெள்ளநீர் வடியாமல் இருப்பதால், விவசாயம் செய்ய முடியவில்லை. எனவே பயிர் சேதஙக்ளை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்கவும், ஆற்றுக்கால்வாயை தூர்வாரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : floodwaters ,lands ,storm ,
× RELATED கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன்...