×

ஆலங்குளத்தில் காங்கிரஸ் நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு விழா

ஆலங்குளம், பிப்.9:  வட சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.எஸ். திரவியம் இல்ல திருமண வரவேற்பு விழா ஆலங்குளத்தில் நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். வட  சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம் மகள்  டாக்டர் மனிஷாவுக்கும், மதுரை  பாண்டி ஹோட்டல் அதிபர் காசிராஜ் மகன் டாக்டர்  தருக்கும் சென்னை வண்ணார்பேட்டை  கிறிஸ்துநாதர் ஆலயத்தில் கடந்த 3ம் தேதி திருமணம் நடந்தது. மாலை நடந்த வரவேற்பில் திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக  காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர்கள்  சுதர்சன நாச்சியப்பன், ஜெகத் ரட்சகன்,  திமுக மாவட்டச் செயலர்கள் இளைய அருணா,  சேகர் பாபு, மாதவரம் சுதர்சனம், காங்கிரஸ் தலைவர்கள் ஊர்வசி அமிர்தராஜ்,  ஜெயக்குமார், டாக்டர் செல்வக்குமார் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலரும் பங்கேற்று வாழ்த்தினர்.  இதைத்தொடர்ந்து ஆலங்குளம் எஸ்.எஸ்.என். திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் திருமண வரவேற்பு விழா  நடந்தது.

இதில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி  ஆதித்தன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் தென்காசி பழனி நாடார், தூத்துக்குடி  தெற்கு ஊர்வசி அமிர்தராஜ், நெல்லை மாநகர் சங்கரபாண்டியன், நெல்லை கிழக்கு   ஜெயக்குமார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன்,  பூங்கோதை எம்எல்ஏ, அவரது கணவர் டாக்டர் பாலாஜி, தட்சணமாற  நாடார் மகாசபை பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ், ஆலடி சங்கரய்யா, தட்சணமாற நாடார் சங்கத் தலைவர் ஆர்கே காளிதாஸ்,  மாநில துணைத்தலைவர் ஓபிசி பிரிவு காமராஜ், மக்கள் நீதிமய்ய நிர்வாகி கருணாகரராஜா, பனங்காட்டு  படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், திமுக கலை இலக்கிய  பகுத்தறிவு பாசறை செயலாளர் ஆலடி எழில்வாணன், திமுக தலைமைக் கழகப் பேச்சாளர்  சாக்ரடீஸ் ராஜா, ஆலங்குளம் வட்டார காங்கிரஸ் தலைவர் அலெக்ஸ்சாண்டர், நகரத்  தலைவர் தங்கசெல்வம், வக்கீல் பால்ராஜ், பிரடீக், காமராஜர் மக்கள்  முன்னேற்ற பேரவை ராஜா  உள்ளிட்ட நிர்வாகிகள், கல்வியாளர்கள், வர்த்தகர்கள் என திரளானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

Tags : Wedding reception ,house ,Congress ,Alangulam ,
× RELATED சிறுமி கொலையை கண்டித்து தொடர்...