×

கோவில்பட்டியில் சாலை, வடிகால் பணி அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார்

கோவில்பட்டி, பிப்.9:  கோவில்பட்டி நகராட்சியில் சிறப்பு சாலை திட்டத்தின்கீழ் ரூ.41 கோடி மதிப்பீட்டில் 40.52 கி.மீ. நீளத்திற்கு பேவர் பிளாக் சாலை, கான்கிரீட் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார். அப்போது அவர், பேசுகையில், ‘கோவில்பட்டியில் குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்க ரூ.20 கோடி நிதி பெறப்பட்டு அந்த பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து தெரு பகுதியிலும் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்படுவதற்கான குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதிகளுக்கு சாலைகள் அமைக்க வேண்டி சிறப்பு சாலை திட்ட நிதி ரூ.41 கோடி பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவில்பட்டி நகராட்சியில் 36வார்டுகளிலும் உள்ள அனைத்து தெருக்களுக்கும் பேவர் பிளாக் சாலை அல்லது கான்கிரீட் சாலை வாறுகால் வசதியுடன் அமைக்க பணிகள் அனைத்தும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுகின்ற அரசாக தமிழக அரசு உள்ளது.  

இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் சந்திரசேகர், தங்கமாரியம்மாள், நகர செயலாளர் விஜயபாண்டியன், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி, துணை தலைவர் பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், வினோபாஜி, மாவட்ட விவசாய அணி செயலாளர் சோலைச்சாமி, துணைச் செயலாளர் மாரியப்பன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கணேஷ்பாண்டியன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், முன்னாள் யூனியன் துணைத்தலைவர் சுப்புராஜ், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் சௌந்தரராஜன், ஆவின் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர மாணவரணி செயலாளர் விநாயகா முருகன் மற்றும் பாபு, ஆபிரகாம் அய்யாத்துரை, அருணாசலசாமி, போடுசாமி, வேலுமணி, ராசையா, கோவில்பட்டி நகராட்சி ஆணையர் ராஜாராம், தாசில்தார் மணிகண்டன், நகராட்சி பொறியாளர் கோவிந்தராஜன், உதவி பொறியாளர்கள் மனோகரன், சரவணன், சுகாதார அலுவலர் இளங்கோ, முருகன், சுகாதார ஆய்வாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Roads ,Drainage Kadampur Raju ,Kovilpatti ,
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...