×

கயத்தாறில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

கயத்தாறு பிப்.9: நபிகள் நாயகத்தை தரக்குறைவாக பேசிய பாஜ நிர்வாகி கல்யாணராமனை கண்டித்து கயத்தாறில் இஸ்லாமியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கயத்தாறு-மதுரை மெயின் ரோட்டில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கயத்தாறு முகம்மது நயினார் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் காதர் மைதீன் தலைமை வகித்தார். அய்யனாரூத்து பள்ளிவாசல் தலைவர் முகம்மது இக்பால், கழுகுமலை துலுக்கர்பட்டி பள்ளிவாசல் தலைவர் அப்துல், மானங்காத்தான் பள்ளிவாசல் தலைவர் அப்துல்காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட நாகர்கோவில் கலாசார பள்ளிவாசல் இமாம் ஷவ்கத் அலி கண்டன உரையாற்றினார். மானங்காத்தான், அய்யனாரூத்து, கழுகுமலை, துலுக்கர்பட்டி, கயத்தாறை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

Tags : Islamists ,Kayathar ,
× RELATED தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை