×

ஆறுமுகநேரியில் கபடி போட்டி பரிசளிப்பு

ஆறுமுகநேரி,பிப்.9: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, ஆறுமுகநேரியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெ.பேரவை சார்பில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி கடந்த 5ம் தேதி துவங்கியது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெ. பேரவை ஜெயலாளர் கேஆர்எம் ராதாகிருஷ்ணன் போட்டியை துவக்கி வைத்தார். ஆறுமுகநேரி காந்தி மைதானத்தில் நடந்த கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த 80 அணிகளும், பெண்கள் பிரிவில் தென்மாவட்டங்களை சேர்ந்த 22 அணிகளும் பங்கேன்றன. தொடர்ந்து மூன்று நாட்கள் நடந்த கபடி போட்டியில் நேற்று முன்தினம் இரவு பரிசளிப்பு விழா நடந்தது. ஆண்கள் பிரிவில் மெஞ்ஞானபுரம் ஜாண் தாமஸ்அணி வெற்றி பெற்று முதல் பரிசான ரூ.50ஆயிரம் மற்றும் கேடயத்தை தட்டிச் சென்றது. 2வது பரிசான ரூ.40ஆயிரத்தை வடக்குநல்லூர் ஏஎஸ்சி அணி பெற்றது. 3 மற்றும் 4வது பரிசுகளை மணத்தி லயன்ஸ்கிளப் அணியும், குருகாட்டூர் அணியும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கினார்.

பெண்களுக்கான பரிவில் விருதுநகர் மங்காபுரம் அணி முதல் பரிசு ரூ.50ஆயிரம் மற்றும் கேடயத்தை வென்றது. 2வது பரிசு ரூ.40ஆயிரத்தை தூத்துக்குடி விவிடி கபடி குழுவும், 3வது பரிசு ரூ.30ஆயிரத்தை நெல்லை பாரதி கபடி குழுவும், 4வது பரிசு ரூ20ஆயிரத்தை நெல்லை சிவந்தி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் எம்எல்ஏ வழங்கினார். நிகழ்ச்சியில் தொழிலதிபர் ஜெய்கணேஷ், அதிமுக மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல்,  திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராமசந்திரன்,ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜ் நாராயணன், நகர செயலாளர்கள் ஆறுமுகநேரி ரவிச்சந்திரன், காயல்பட்டினம் காயல் மவுலானா, திருச்செந்தூர் மகேந்திரன், காணம் செந்தமிழ்சேகர், நாசரேத் கிங்ஸ்லி, ஆறுமுகநேரி நகர துணைசெயலாளர் பெரியசாமி, பொருளாளர் காசி விஷ்வநாதன், இளைஞரணி செயலாளர் நிவாஸ்கண்ணன், நகர ஜெ.பேரவை செயலாளர் காந்தி என்ற ராமசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Arumuganeri ,
× RELATED 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி...