×

சிறுவனை கொடுமைப்படுத்திய 4 பேர் மீது வழக்கு

திருக்காட்டுப்பள்ளி, பிப்.26: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் செல்போன் திருடியதாக கூறி சிறுவனை கொடுமைப்படுத்திய 4 பேர் மீது வழக்கு பதிந்த போலீசார், அதில் 2 பேரை கைது செய்தனர். தஞ்சாவூர் மனோஜ்பட்டி பொதிகை நகரை சேர்ந்தவர் குழுமையன் மகன் பிரவீன் (15). இவரை பூதலூர் நான்சி நகரை சேர்ந்த குமார் மகன் விக்னேஷ் (33), நாகராஜ் மகன் தமிழரசன் (20), தஞ்சாவூர் மனோஜ்பட்டி சரஸ்வதிநகர் நாகராஜ் மகன் பத்மநாதன் (24) மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் இணைந்து செல்போன் திருடியதாக குற்றம் சாட்டி, தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதில் காயம் அடைந்த பிரவீன் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் பூதலூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன் பேரில், ஆய்வாளர் (பொ) சத்யபாமா வழக்கு பதிந்து, விக்னேஷ் மற்றும் பத்மநாதனை கைது செய்தார். மற்ற இருவரையும் தேடி வருகிறார்.

 

Tags : Thirukattupalli ,Phoothalur, Thanjavur district ,Praveen ,Pothikai Nagar, Manojpatti, Thanjavur.… ,
× RELATED கஞ்சா பறிமுதல்