தேனி மாவட்டத்திற்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு திமுக ஊழியர் கூட்டத்தில் தங்கதமிழ்ச்செல்வன் அறிவிப்பு

பெரியகுளம், பிப். 9: பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தில் பெரியகுளம் நகர், ஒன்றிய திமுக ஊழியர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் பேசியதாவது: தேனி மாவட்டத்திற்கு விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்னும் தேர்தல் பிரசாரத்துக்கு நாளை (இன்று) வருகை தரும் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்போம். போடி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை உறுதியாக தோற்கடிப்போம். போடி தொகுதிக்கு அவர் ஒன்றும் செய்யவில்லை.

 பணத்தை கொடுத்து வெற்றி பெறலாம் என நினைக்கிறார். பாஜவுடன் கூட்டணி வைத்தால் தோற்பார்கள்; கூட்டணி வைக்காவிட்டால் ஜெயிலுக்கு செல்வார்கள். ஜெயலலிதா சம்பாதித்த ரூ.2 லட்சம் கோடி எங்கிருக்கிறது என ஈபிஎஸ், ஓபிஎஸ்ஸூக்கு தெரியும். ஜெயலலிதா சாவில் உள்ள மர்மத்தை, மு.க.ஸ்டாலின் முதல்வரானதும் கண்டுபிடித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவார்’ என்றார். கூட்டத்தில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், மாநில உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் மூக்கையா, மாவட்ட பொருளாளர் அருணாசேகர், நகர பொறுப்பாளர் முரளி, ஒன்றியப் பொறுப்பாளர் பாண்டியன், ஆதிதிராவிட மாவட்ட துணை அமைப்பாளர் பிச்சை, நிர்வாகிகள் காமராஜ், அன்பழகன், ஜீவராஜ், ரவி, அப்பாஸ்கான், நாகலிங்கம் உட்பட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>