தேவகோட்டையில் கால்பந்து போட்டி

தேவகோட்டை, பிப்.9: தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் மெரினா கால்பந்து கழக முதலாம் ஆண்டு கால்பந்து போட்டி நடைபெற்றது. வழக்கறிஞர் அசோகன் தலைமை வகித்தார். சரவணன் முன்னிலை வகித்தார்.

ரியாஸ்கான், முத்துக்கருப்பன் நடுவர்களாக செயல்பட்டனர். 40 அணிகள் விளையாடின. இறுதி போட்டியில் கோட்டையூர் சி.வி.ஆர் அணியும், தேவகோட்டை மெரினா அணியும் மோதின. தேவகோட்டை மெரினா அணி வெற்றி பெற்றது. போட்டியை பிரபாகரன், ஜஸ்வந்த் ஆகியோர் ஏற்பாடுகள் செய்தனர்.

Related Stories: