பரமக்குடியில் மாவட்ட சிலம்ப போட்டி

பரமக்குடி, பிப்.9: பரமக்குடியில் மாணவ,மாணவிகளுக்கான சிலம்பாட்ட போட்டிகள் நடைபெற்றது. இதனை பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்ட அமச்சூர் சிலம்பாட்டக் கழகத்தின் சார்பாக சீனியர், ஜூனியர் மாணவ, மாணவிகளுக்கான சிலம்பாட்ட போட்டிகள், பரமக்குடி ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பாஜக மாநில எஸ்.சி எஸ்.டி. அணி தலைவர் பாலகணபதி தலைமை வகித்தார். அமச்சூர் சிலம்பாட்ட கழக செயலாளர் மீனாட்சி சுந்தரம், பொருளாளர் ஜெகதீசன், துணைத் தலைவர் ராஜன் மாஸ்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினரான எம்எல்ஏ சதன் பிரபாகர் சிலம்பாட்ட போட்டிகளை தொடங்கி வைத்து சிலம்பு விளையாடினார். இதனை தொடர்ந்து, மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நகர செயலாளர் கணேசன், பரமக்குடி ஒன்றிய தகவல் தொழில்நுட்ப செயலாளர் ராமநாதன், சிலம்பாட்ட கழக தலைவர் சண்முகராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>