பரமக்குடி ஜிஹெச்சில் உயர் சிகிச்சைக்கு ரூ.5.16 கோடியில் கூடுதல் கட்டிடம் காணொலியில் முதல்வர் திறந்தார்

பரமக்குடி, பிப்.9:  பரமக்குடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு கூடுதல் கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் ரூ.5.16 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முடிவடைந்ததை யொட்டி, நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.  தொடர்ந்து, பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் அரசு மருத்துவமனை கட்டிடத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். மருத்துவமனை தலைமை டாக்டர் நாகநாதன் முன்னிலை வகித்தார். ஒப்பந்தகாரர் முருகானந்தம் வரவேற்றார். இதில் உயர் சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கம், நுண்கதிர் ஆய்வகம், ஸ்கேன் பிரிவு, ரத்த சுத்திகரிப்பு பிரிவு, 30 படுக்கைகள் கொண்ட வார்டுகள் ஆகியவை லிப்ட் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல் மாலிக், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரஜினிகாந்த், நகர் இளைஞர் பாசறை செயலாளர் செந்தில்குமார், வார்டு செயலாளர் நாகராஜன், ஒன்றிய மாணவரணி செயலாளர் முத்துக்குமார், கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் திசை நாதன், பரமக்குடி ஒன்றிய ஐடி பிரிவு செயலாளர் ராமநாதன்  உள்பட பலர் கலந்து கொண்டனர். பரமக்குடி நகர செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.

Related Stories:

>