நம்புதாளையில் எஸ்டிபிஐ கூட்டம்

தொண்டி, பிப்.9:  நம்புதாளையில் எஸ்டிபிஐ நகர் நிர்வாகிகள் மற்றும் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நகர் செயலாளர் அசாருதீன் தலைமை வகித்தார். ஆரிப் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பரக்கத்துல்லா, திருவாடானை தொகுதி செயலாளர் ஹனீப் முன்னிலை வகித்தனர். தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்ற தலைப்பில் தொண்டி நகர் தலைவர் அப்துர் ரஹ்மான், கிளை நிர்வாகிகள் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து தொகுதி இணை செயலாளார் மஜித், ஊடக அணி மாவட்ட செயலாளர் முஜாஹிதீன் ஆகியோர் பேசினர். தேர்தல் குறித்த சிறப்பு கூட்டம் வரும் 14ம் தேதி தேவிபட்டினத்தில் நடைபெற உள்ளது. அதில் அனைத்து உறுப்பினர்களையும் கலந்து கொள்ள செய்வது குறித்து பேசப்பட்டது. நாசர் அலி, மன்சூர் அலி உட்பட நம்புதாளை, தொண்டி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்ரித் நன்றி கூறினார்.

Related Stories:

>