பெற்றோர் ஆசிரிய கழக கூட்டம்

கீழக்கரை, பிப்.9:  கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 2020 -2021ம் கல்வி ஆண்டிற்கான முதலாமாண்டு மாணவிகளுக்கான பெற்றோர் ஆசிரியக் கழகப் பொதுக்குழுக் கூட்டம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியக் கழகக் கூட்ட ஒருங்கிணைப்பாளர் நாகஜோதி வரவேற்றார்.கல்லூரி முதல்வர் சுமையா பெண் கல்வியின் முக்கியத்துவம், கல்வி உதவித்தொகை, பெண் குழந்தைகள் கல்வியில் பெற்றோர்கள் அதிகம் கவனம் செலுத்தவேண்டும். படிப்பிற்கு பணம் ஒரு தடை இல்லை என்பது பற்றியும் கொரோனாவிழிப்புணர்வு மற்றும் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையைத் தூண்டும் விதமாக பல்வேறு கருத்துக்களைக் கூறினார்கள். இக்கூட்டத்தில் முதலாமாண்டு மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள்.

Related Stories:

>