×

விக்கிரமங்கலத்தில் அஇபாபிக கூட்டம்

சோழவந்தான், பிப். 9:  சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மதுரை மேற்கு மாவட்ட ஊழியர் கூட்டம் நடைபெற்றது. மாநில இளைஞரணி செயலாளர் சாமி தலைமை வகிக்க, ஒன்றிய செயலாளர் ரவி, தலைவர் ஆனந்தன், மாவட்ட கவுன்சிலர் காசி முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் அரவிந்த் வரவேற்றார். தேசிய துணை தலைவரும், மாநில பொது செயலாளருமான கதிரவன், தேசிய செயலாளர் தேவராஜன் சிறப்புரையாற்றினார். இதில் மாநில தலைவர் கர்ணன், செயலாளர் பசும்பொன், தொழிற்சங்க செயலாளர் திருப்பதி, மாவட்ட செயலாளர் ஆதிசேடன், பொருளாளர் அய்யப்பன், பொது செயலாளர் ராஜா, ஊராட்சி மன்ற தலைவர்கள் தமிழரசி, பூங்கோடி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Ipoh ,meeting ,Wickramangala ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...