×

மதுரை மாவட்டத்தில் 10 மாதத்திற்கு பின் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு மாணவ, மாணவிகள் உற்சாகம்

மதுரை, பிப். 9: மதுரை மாவட்டத்தில் கல்லூரிகளும், 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளும் திறக்கப்பட்டன. 10 மாதத்திற்கு பின் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர். மதுரையில் கொரேனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. பொது தேர்வு நெருங்கி வருவதால் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜன.19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் டிச. 6ம் தேதி முதல் திறக்கப்பட்டன.  தொடர்ந்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்க ஆலோசனை வழங்கப்பட்டது. இதற்கு பெற்றோரும் அனுமதி வழங்கிய நிலையில் பள்ளிகள் பிப்.8ம் தேதி திறக்கப்படும் என அரசு அறிவித்தது.  இதை தொடர்ந்து நேற்று முதல் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும், 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன. நீண்ட நாட்கள் கழித்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள்  மாணவர்கள் ஆர்வத்துடன் வந்தனர். முன்னதாக மாணவ, மாணவிகள் உடல் வெப்ப பரிசோதனைக்கு பின் பள்ளி, கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வருவதுடன், கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டும் என அறிவித்தப்பட்டுள்ளது.

Tags : schools ,colleges ,Madurai district ,
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...