டிராக்டர் மோதி ஒருவர் பலி

பேரையூர், பிப். 9:  பேரையூர் அருகே பி.சொக்கம்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (32). பேரையூரிலுள்ள ஒரு வங்கியில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு டூவீலரில் ஊருக்குள் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிராக்டர் டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராமகிருஷ்ணன் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராமகிருஷ்ணன் உயிரிழந்தார். இதுகுறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>