திண்டுக்கல், பிப்.9: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி, மாணவரணி ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான ஐ.பி.செந்தில்குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 7 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறுவதற்கு அனைத்து மாவட்ட இளைஞரணி, மாணவரணி அமைப்பாளர்கள் பணியாற்ற வேண்டும், வருகின்ற 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நான்கு நாட்கள் மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகை குறித்தும், சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்றும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் நாகராஜ் தண்டபாணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அஸ்வின் பிரபாகரன், நகரச் செயலாளர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட ஊராட்சி தலைவர் பாஸ்கரன், இளைஞரணி துணை அமைப்பாளர் பிலால் உசேன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சூசை ராபர்ட் மற்றும் பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் இளைஞரணி மாணவரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.