×

பள்ளி, கல்லூரிகள் திறப்பு வெப்ப சோதனைக்கு பிறகு மாணவ, மாணவிகள் அனுமதி

திண்டுக்கல்/பழநி, பிப்.9: திண்டுக்கல் மாவட்டத்தில் 11 மாதங்களுக்கு பிறகு நேற்று 9, 11ம் வகுப்புகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் வெப்ப பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர்.  
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டன. வைரஸ் தொற்று குறைவின் காரணமாக மீண்டும் பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த மாதம் 18ம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்புகள் துவங்கின. இதனிடையே நேற்று 9 மற்றும் 11ம் வகுப்புகள், கல்லூரியின் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கின.
திண்டுக்கல், வேடச்சந்தூர், வத்தலகுண்டு, பழநி ஆகிய நான்கு கல்வி மாவட்டங்களில் உள்ள 390 பள்ளிகளும் திறக்கப்பட்டன. மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வந்தனர். கல்லூரியின் நுழைவு வாயிலேயே மாணவர்கள் சமூக இடைவெளியுடன் நிற்க வைக்கப்பட்டு, முகக்கவசம் மற்றும் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் பிரபாகர் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் தமிழ்த்துறைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, இந்திய பண்பாட்டுத்துறை உதவிப் பேராசிரியர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : heat test ,school ,colleges ,
× RELATED வத்திராயிருப்பு அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி