×

10 ஆண்டுகளாக பட்டா வழங்காமல் இழுத்தடிப்பு: கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி

செங்கல்பட்டு: 10ஆண்டுகள் ஆகியும் பட்டா வழங்காததால் கலெக்டர் அலுவலகம் முன்பு, தீக்குளிக்க முயன்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர். சென்னை தரமணியை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மகன் வேல்முருகன் (57). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வேல்முருகன், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த சோழவரம் பகுதியில் 3 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். அந்த நிலத்துக்கு பட்டா கேட்டு தொடர்ந்து அதிகாரிகளுக்கு மனு கொடுத்து வந்துள்ளார்.

கடந்த ஒராண்டுக்கு முன் வேமுருகனின் நிலத்தின் அருகில் உள்ள நிலங்களுக்கு வருவாய்த்துறையினர் பட்டா வழங்கியுள்ளனர். ஆனால் அவருக்கு மட்டும் பட்டா வழங்காமல் அதிகாரிகள் காலம்கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தனது நிலத்துக்கு பட்டா வழங்கக்கோரி, துறை சார்ந்த அனைத்து அதிகாரிகளிடமும் வேல்முருகன் மனு அளித்துள்ளார். ஆனால் அதிகாரிகள், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள்  குறைதீர் கூட்டம் நடந்தது. அங்கு  வந்த விவசாயி வேல்முருகன், திடீரென பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்ததும், அருகில் இருந்தவர்கள், அவரை தடுத்து நிறுத்தி, அவர் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து செங்கல்பட்டு டவுன் போலீசார் அங்கு சென்று, தீக்குளிக்க முயன்றவரை மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து வேல்முருகன் கூறுகையில், அனைத்து அலுவலகங்களிலும் வாய்மையே வெல்லும் என்று எழுதிவைத்துள்ளனர். ஆனால், ஏழைகளின் குரல் எடுபடவில்லை. 10 ஆண்டுகளாக கலெக்டர், தாசில்தார், விஏஒ உள்பட அனைத்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் ஏமாற்றமே மிஞ்சியது. அதனால், அதிகாரிகளை கண்டித்து தீக்குளிக்க முடிவு செய்தேன் என்றார்.

Tags : collector ,office ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...