×

திருநின்றவூரில் 2.5 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணம் மூலம் அபரிகரிப்பு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது

சென்னை: 2.5 கோடி மதிப்புள்ள திருநின்றவூர் சரஸ்வதிநகர் விரிவாக்கத்தில் உள்ள நிலத்தினை போலியான ஆவணங்கள் மூலம் அபரிகரித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். நம்பிக்கைநாதன்(60) என்பவர் கடந்த 1998ல் சுந்தராஜ் என்பவருக்கு சொந்தமான திருவள்ளுர் மாவட்டம், ஆவடி வட்டம், திருநின்றவூர் கிராமம், சரஸ்வதிநகர் விரிவாக்கம் அடங்கிய 0.93 சென்ட் நிலத்தை 2.5 கோடி விலைக்கு வாங்கியுள்ளார். மேற்படி சொத்தில் 0.85 சென்ட் இடத்தை முத்து என்பவருக்கு பூர்விக இடம் என்று போலி ஆவணங்கள் தயாரித்து முத்துவின் மகன்கள் வெங்கடேசன், நாகேந்திரன், முருகன் ஆகியோர் மூன்று நபர்களும் தங்களுக்குள் ஏ,பி,சி என ஷெட்யூல் பிரித்து ஒருபோலியான தான உடன்படிக்கை ஆவணம் தயார் செய்து அதை ஆவடிசார்-பதிவாளர் அவலுவலத்தில் பாக பிரிவினைப் பத்திரமாக பதிவு செய்துள்ளார்கள்.

இது சம்பந்தமாக புகார்தாரர்  நம்பிக்கைநாதன் தங்களுக்குள்  போலியான ஆவணங்கள் மூலம் பாகப்பிரிவினைபத்திரம் தயார் செய்து அதன் மூலம் தனக்கு சொந்தமான மேற்படி சொத்தை அபகரித்து விட்டதாக காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அதன்படி மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையில் தாத்தா சாணன் என்ற பெயரை நம்பிக்கைநாதன் (எ) சாணன் எனவும் அவரது மகனான முத்து மற்றும் மனைவி மேனகா ஆகியோர்கள் பூர்விகமாக அனுபவித்து வந்ததாகவும், அவர்களின் மகன்களான வெங்கடேசன், முருகன் மற்றும் நாகேந்திரன் ஆகியோர்கள் தங்களுக்குள் ஒரு பாகப் பிரிவினை பத்திரம் போலியாக பதிவு செய்து அதன் மூலம் நம்பிக்கை நாதனுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்துள்ளதாக தெரியவந்தது.

இதில் திருநின்றவூர், மேட்டுதெருவை சேர்ந்த வெங்கடேசன்(57) மற்றும் முருகன்(46) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அப்போலி ஆவணத்தில் திருநின்றவூர், பெரியகாலனியை சேர்ந்த  புண்ணியக்கோட்டி(46)  என்பவரும் சாட்சி கையெழுத்து போட்டதால் அவரும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வெங்கடேசன், முருகன் மற்றும் புண்ணியக்கோட்டி ஆகியோர் நீதிமன்றம் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Tags : land ,Thiruninravur ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!