சொத்து தகராறில் பயங்கரம்: கத்தியால் குத்தி அண்ணன் கொலை: போலீசில் தம்பி சரண்

பெரம்பூர்: சொத்து தகராறில் சொந்த அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர். கொளத்தூர் காமராஜர் முதல் தெருவை சேர்ந்தவர் பழனி (40). கம்ப்யூட்டர் டிசைனிங் வேலை செய்து வந்தார். இவரது தம்பி தமிழ்செல்லன் (38). சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். வீட்டின் கீழ் தளத்தில் தமிழ்செல்வனும், மேல் தளத்தில் பழனியும் வசித்து வந்தனர். பழனிக்கு திருமணமாகி கவிதா என்ற மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.

தம்பி தமிழ்செல்வனுக்கு 8 வருடங்களுக்கு முன்பு திருமணமானது. கடந்த 4 வருடங்களாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.   அண்ணன், தம்பி இடையே நீண்ட நாட்களாக சொத்து பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை பழனி தனது வீட்டு வளாகத்தில் இருந்த குழாயில் தண்ணீர் பிடிக்க வந்தபோது, வெளியே வந்த தம்பி தமிழ்செல்வன் அவருடன் தகராறில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார்.

பின்னர், கத்தியுடன் கொளத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்து, போலீசாரிடம் விவரத்தை கூறினார். இதையடுத்து, ேபாலீசார் சம்பவ இடத்திற்கு சென்று,  பழனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் தமிழ்செல்வனுக்கு குடிப்பழக்கம் மற்றும் கஞ்சா பழக்கம் இருந்து வந்ததாகவும், பலமுறை தனது அண்ணனிடம் சொத்துக்காக சண்டையிட்டு வந்ததாகவும் தெரிந்தது. நேற்றும்  போதையில் இருந்ததால் கீழே தண்ணீர் பிடிக்க வந்த அண்ணனிடம் தகராறு செய்து கொலை செய்தது. தமிழ்செல்வனை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். சொத்துக்காக தனது அண்ணனை தம்பி கொலை செய்த சம்பவம் கொளத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>