×

மாணவி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை கடலூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவு

கடலூர், பிப். 9: பிளஸ்2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ரெட்டியூரை சேர்ந்தவர் புலவேந்தன். இவரது மகன் பிரகாஷ் ( 25). அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவியை கடந்த 9.12.2018 அன்று மாணவி, தண்ணீர் எடுப்பதற்காக பாத்திரத்துடன் அருகில் உள்ள குச்சிரான் வாய்க்காலுக்கு சென்றார். அப்போது பின்தொடர்ந்து வந்த பிரகாஷ், மாணவியை  வாய்க்கால் கரையோரம் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் சத்தம் கேட்டு வந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் பிரகாஷை கைது செய்தனர். இதுதொடர்பாக  கடலூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில் நேற்று இறுதி கட்ட விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட பிரகாஷீக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5,500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

30 நாட்களுக்குள் இழப்பீடு
குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் மற்றும் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் விதிகளின்படி அல்லது மாநில அரசின் ஏதேனும் ஒரு திட்டத்தின் மூலம் 30 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்கண்ட வழக்கு தொடர்பாக நீதிபதி ஏழிலரசி உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.

Tags : Cuddalore Pokcho ,court ,teenager ,prison ,
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...