×

வேட்டையாடினார்களா? வனத்துறை விசாரணை அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தர அரசாணையை ரத்து செய்ய கோரி ரத்த கையெழுத்து மனு


திருச்சி, பிப்.8: திருச்சியில் அனைத்து தனியார் கல்லூரி, அரசு உதவிபெறும் கல்லூரி, பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நேற்று அவசரக் கூட்டம் நடைபெற்றது.கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தமிழரசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து தனியார், அரசு உதவிபெறும் கல்லூரிகள், பல்கலைக் கழகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் 10 வருடங்களுக்கு மேலாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் தற்காலிக விரிவுரையாளர்கள். மேலும் பிஎச்.டி, எம்.பில், செட், நெட் தேர்ச்சி பெற்று அரசுக் கல்லூரி பணிக்காக காத்திருபோரும் பங்கேற்றனர்.

அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களை பணிநிரந்தரம் செய்தால் தனியார் கல்லூரி, அரசு உதவிபெறும் கல்லூரி, பல்கலைக் கழகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான தற்காலிக விரிவுரையாளர்களுக்கு அரசுக் கல்லூரிகளில் வேலை கிடைக்காமல் போய்விடும் என்பதை கருத்தில் கொண்டு, அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரப்படுத்தும் முயற்சியை தமிழக முதல்வர் தடை செய்ய வேண்டும். சம நீதி, சம அந்தஸ்து அடிப்படையில் அனைவருக்கும் அரசுக் கல்லூரி ஆசிரியப் பணி கிடைத்திடும் விதமாக ஒரே தேர்வு முறையான பொதுவான டி.ஆர்.பி. தேர்ச்சி முறையை (Common TRB Selection Method) பின்பற்ற உயர்கல்வித் துறைக்கு தமிழக முதல்வர் அவசர ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கையை ரத்தக் கையொப்பமிட்டு முதல்வருக்கு கோரிக்கையாக சமர்ப்பிப்பது என தீர்மானம் நிறைவேற்றினர். அதனை முதல்வருக்கு ரத்தக் கையெழுத்து கோரிக்கையாக அனுப்பினர்.
மேலும் அரசு எங்கள் கோரிக்கையை ஏற்காமல் அரசுக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களை இந்தநிரந்தரம் செய்ய முடிவெடுக்குமேயானால் தங்களது வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், வரும் ஆளும் அரசுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்தனர்.

Tags : revocation ,Forest Department Inquiry Government College Honorary Lecturers Petition Blood Signature Petition ,
× RELATED குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ்...