×

ஆமூர் ஜெயராமன் இல்ல திருமண வரவேற்பு விழா

மண்ணச்சநல்லூர், பிப்.8: திருச்சி மாவட்டம் முசிறி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஆமூர் ஜெயராமன் இல்லத் திருமண வரவேற்பு விழா நேற்று ஆமூர் மணமகள் இல்லத்தில் நடைபெற்றது. மணமக்கள் திவ்யபாலா, விவேக்பிரபு ஆகியோரை தமிழக மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வு துறை அமைச்சரும் கழக அமைப்பு செயலாளருமான தங்கமணி, போக்குவரத்து துறை அமைச்சரும், திருச்சி புறநகர் வடக்கு மண்டல பொறுப்பாளருமான விஜயபாஸ்கர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி அனைவரையும் வரவேற்றார். கழக அமைப்புச் செயலாளரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரமான வளர்மதி மணமக்களை வாழ்த்தி பேசினார். விழாவில் மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ பரமேஸ்வரி, மாவட்ட மாணவரணி செயலாளர் அறிவழகன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் ஜெயகுமார், ஆதாளி, புல்லட் ஜான் உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில் முசிறி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆமூர் ஜெயராமன் நன்றி தெரிவித்தார்.

Tags : Aamur Jayaraman Home Wedding Reception ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு