×

ஜெம்புநாதபுரத்தில் பரபரப்பு திருச்சி-துவாக்குடி வரை சாலை விரிவாக்கத்திற்காக ஆயிரக்கணக்கான கடை, வீடுகளை அகற்ற நெடுஞ்சாலை துறை முடிவு கலெக்டரிடம் மனு அளிக்க வணிகர்களுக்கு அழைப்பு

திருச்சி, பிப்.8: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொது செயலாளர் கோவிந்தராஜூலு விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை 14.5 கி.மீ தூரத்திறஅகு சாலை இருபுறத்திலும் விரிவாக்கம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான கடைகள், கட்டிடங்கள் குயிருப்புகளை கையப்படுத்தும் முயற்சியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டு வருகிறது. சில தனி நபர்களின் விருப்பத்தின் பேரில் அகற்ற துடிப்பது முற்றிலும் மனிதாபிமானமற்ற செயலாகும். வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரமான கடைகள், கட்டிடங்கள், குடியிருப்புகள், தொழிற்கூடங்கள், கல்வி நிறுவனங்களுக்கு எந்தவித ஆபத்தும் நேரக்கூடாத என்பதை வலியுறுத்தி சாலை விரிவாக்க பணிகளால் பாதிக்கப்படுவோர் கூட்டமைப்பு சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டரிடம் நாளை (9ம் தேதி) காலை 9 மணிக்கு கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். எனவே அனைத்து தரப்பினரும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தங்கள் குடும்பத்தினர் மற்றும் பணியாளர்கள், ஊழியர்களுடன் வருகை தர வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : traders ,decision collector ,houses ,shops ,Highway Department ,Trichy-Tuvakkudi ,
× RELATED ரூ 457.76 கோடி தவறான உள்ளீட்டு வரி 151...