கிணற்றில் புதுப்பெண் சடலம் ஆர்டிஓ விசாரணை

முசிறி,பிப்.8: முசிறி சுந்தர் நகர் பகுதியில் உள்ள தோட்டத்து கிணற்றில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக முசிறி மேற்கு விஏஓ ஆனந்த் முசிறி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெகதீஸ்வரன் என்பவரது மனைவி ரோஜா (21) என்பதும், இவர்களுக்கு திருமணமாகி 10 நாட்கள் தான் ஆகிறது என்பதும் தெரியவந்தது. இந்தசம்பவம் குறித்து முசிறி ஆர்டிஓ (பொறுப்பு) துரைமுருகன் விசாரணை மேற்கொண்டார். மேலும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>